கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மல்யுத்த தகுதி சுற்று போட்டி தள்ளிவைப்பு


கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மல்யுத்த தகுதி சுற்று போட்டி தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 11:38 PM GMT (Updated: 28 Feb 2020 11:38 PM GMT)

கொரோனா வைரஸ் பீதி எதிரொலியாக, ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மல்யுத்த தகுதி சுற்று போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை சீரிய முறையில் தயார்படுத்துவதற்காக, பயிற்சி அளிப்பதில் மிகுந்த அனுபவசாலியான இந்தோனேஷியாவைச் சேர்ந்த அகுஸ் வி சான்டோசோ பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சாய்னா உள்ளிட்ட இந்திய ஒற்றையர் பிரிவு வீரர், வீராங்கனைகளுடன் இணைந்து பணியாற்றுவார். அவரது நியமனத்துக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவருக்கு மாத ஊதியம் ரூ.5¾ லட்சம் ஆகும்.

* கிர்கிஸ்தானில் மார்ச் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மல்யுத்த தகுதி சுற்று போட்டி, கொரோனா வைரஸ் பீதி எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், இரட்டையர் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட்டில் கோன்டினென் (பின்லாந்து)- லினர்ட் ஸ்டிரப் (ஜெர்மனி) இணையிடம் தோல்வி அடைந்தது.


Next Story