‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 15 March 2020 11:37 PM GMT (Updated: 15 March 2020 11:37 PM GMT)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-23, 25-21, 25-21 என்ற நேர் செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தியது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- இந்தியன் வங்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 5 செட் வரை திரிலிங்காக நீடித்தது. இறுதியில் இந்தியன் ஓவர்சீஸ் அணி 25-17, 24-26, 22-25, 25-22, 15-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. சிவகங்கையில் கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி நடக்க இருப்பதால் 3 நாட்களுக்கு ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டிக்கு ஓய்வு நாளாகும்.


Next Story