பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை + "||" + Olympic competition, cancellation, 4 years of labor, Indian weightlifting hero Meerabhai

ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை

ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும் - இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை
ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைவதால் ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போகக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. உலக விளையாட்டு வீரர்களுக்கான குரூப்பும் ஒலிம்பிக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

இந்த போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவோ அல்லது தள்ளிவைக்கவோ கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மீராபாய் சானு நேற்று அளித்த பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்காவிட்டால் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட தீவிர பயிற்சி, கடின உழைப்பு அனைத்தும் வீணாகி விடும். எனவே ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கிறேன். எனக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார்.

காமன்வெல்த் விளையாட்டில் 2 பதக்கம் வென்றவரான மணிப்பூரைச் சேர்ந்த 25 வயதான மீராபாய் சானு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இடத்தை உறுதி செய்த இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் அளித்த பேட்டியில், ‘கொரோனா தாண்டவமாடும் தற்போதைய சூழலில் அணித் தேர்வுக்கான தகுதி சுற்று போட்டிகள் தள்ளிவைக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

நான் வீட்டில் தற்போது ரிலாக்சாக இருக்கிறேன். தற்போதைய சூழல் நான் போட்டிக்கு தயாராகுவதையோ அல்லது மனரீதியாகவோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் தொடர்ந்து யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். அது தான் துப்பாக்கி சுடுதலில் பதற்றமின்றி நிதானமாக செயல்பட உதவும். ஒலிம்பிக் போட்டி எப்போது நடந்தாலும் அது மிகப்பெரியது தான். எனவே நாங்கள் அதற்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். திட்டமிட்டபடி நான் ஒலிம்பிக் போட்டிக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா எதிரொலி: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்து?
டி.என்.பி.எல். போட்டியை ரத்து செய்வது குறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தற்காலிக ரத்து
பெங்களூருவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
3. இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு: பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில், பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா ரத்து
கொரோனா ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து
திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர் கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.