ஏழை எளியவர்களுக்கு உதவிய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா


ஏழை எளியவர்களுக்கு உதவிய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா
x
தினத்தந்தி 22 April 2020 4:57 PM IST (Updated: 22 April 2020 4:57 PM IST)
t-max-icont-min-icon

பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தன்னால் ஆன உதவிகளை ஏழை எளியோருக்கு வழங்கி உள்ளார்.


ஐதராபாத்,

கொரோனா என்ற புதிய கொடிய தொற்று நோய் பரவிய சில மாதங்களில், ஒன்றரை லட்சம் பேரின் உயிரைப்பறித்துக் கொண்டது. பல லட்சம் பேரை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தையே உருக்குலைத்துவிட்டது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 640-ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் தனது வாழ்வாரத்தை இழந்து நிற்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள், பிற மாநிலங்களுக்குப் போய் வேலை பார்த்து சம்பாதித்து வந்தவர்கள், பிச்சைக்காரர்கள், சாலையோரங்களில் குடியிருப்போர், மாற்றுத் திறனாளிகள் இவர்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா களத்தில் இறங்கி பலருக்கும் உதவி செய்து வருகிறார்.
ஐதராபாத்தில் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தானே தனது கையால் நிவாரணப் பொருட்களை  ஜுவாலா கட்டா வழங்கியுள்ளார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, முகக் கவசம், கிருமி நாசினி என பல பல பொருட்களை அவர் கொடுத்துள்ளார். பிற மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் என பலருக்கும் அவர் உதவி செய்துள்ளார்.
1 More update

Next Story