பிற விளையாட்டு

3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த் + "||" + 3 months of hunger in Germany: return home, Anand

3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த்

3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த்
செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 3 மாதம் ஜெர்மனியில் தவித்து வந்த நிலையில், நேற்று தாயகம் திரும்பினார்,
பெங்களூரு, 

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவரும், சென்னையைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த், பன்டெஸ்லிகா செஸ் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றார். போட்டியை முடித்துக் கொண்டு மார்ச்சில் அவர் தாயகம் திரும்ப வேண்டியது. அதற்குள் கொரோனா வைரசின் ருத்ரதாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால் 3 மாதங்கள் அங்கு தவித்தார். ஆன்லைன் செஸ் போட்டியில் பங்கேற்பு, வர்ணனையாளர் பணி, சமூக வலைதளங்கள் மூலம் வீரர்களுடன் கலந்துரையாடல் என்று நேரத்தை செலவிட்டார்.

தற்போது பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வழியாக நேற்று இந்தியாவுக்கு திரும்பினார். ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக பெங்களூருவுக்கு நேற்று பிற்பகல் வந்தடைந்த ஆனந்த் கர்நாடகாவில் பின்பற்றப்படும் நடைமுறைப்படி கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். பிறகு சென்னைக்கு சென்றதும் அவரது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். ஆனந்தின் மனைவி அருணா கூறுகையில், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சொந்த நாட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் முடிந்ததும் அவர் சென்னைக்கு வருவார்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழையால் கரைபுரண்ட காட்டாற்று வெள்ளம் பஸ் செல்ல முடியாததால் பயணிகள் தவிப்பு
கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பஸ் செல்ல முடியாததால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
2. பீகார், உத்தரபிரதேசத்துக்கு 1,450 வட மாநில தொழிலாளர்கள் பயணம் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்
புதுவையில் தங்கி இருந்து தொழிற் சாலைகளில் வேலைபார்த்து வந்த 1,450 தொழிலாளர்கள் பீகார், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
3. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: சேலத்தில் மீண்டும் வேலையை தொடங்கிய சலவைத்தொழிலாளர்கள்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சலவைத்தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் வேலையை தொடங்கி உள்ளனர்.
4. மராட்டிய மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 550 பேர் சிக்கி தவிப்பு
மராட்டிய மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 550 பேர் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் பசியும், பட்டினியுமாக இருப்பதாக கண்ணீர் மல்க கூறினர்.
5. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆந்திர மாநில தொழிலாளர்கள் தவிப்பு
கெலமங்கலத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆந்திர மாநில தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.