பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது.
* இந்திய பெண்கள் மல்யுத்த அணியின் பயிற்சி முகாம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாய் மையத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ‘பயிற்சி முகாமில் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொள்வார்கள். கலந்து கொள்ளாத வீராங்கனைகளுக்கு பதிலாக மாற்று வீராங்கனைகள் சேர்க்கப்படுவார்கள். முகாமில் பங்கேற்காதவர்கள் தேசிய அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படமாட்டார்கள்’ என்றார்.

* டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சவுரவ் கங்குலியின் ஆலோசனை கேப்டனாக தனது வளர்ச்சிக்கு உதவின என்று கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் கங்குலி, முன்பு டெல்லி அணியின் ஆலோசகராக இருந்ததால் அவர் தற்போது இரட்டை ஆதாய பதவி வகிக்கிறாரா? என்று சர்ச்சை கிளம்பியது. இது குறித்து கங்குலி பதிலளிக்கையில், ‘கடந்த வருடம் ஸ்ரேயாஸ் அய்யருக்கு உதவினேன். நான் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கலாம். ஆனால் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 500 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன் என்பதை மறந்து விட வேண்டாம். நான் இளம் வீரர்களிடம் பேசுவேன். அவர்களுக்கு உதவி செய்வேன். ஸ்ரேயாஸ் அய்யராக இருந்தாலும் சரி அல்லது விராட் கோலியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உதவி தேவை என்றால் நான் செய்வேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயிற்சி முகாம்
கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
2. பயிற்சி முகாம்
ஆலங்குளத்தில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
3. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
சிவகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
4. தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
5. பயிற்சி முகாம்
பயிற்சி முகாம்