ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 6 தங்கப்பதக்கம்


ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 6 தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2021 7:28 PM GMT (Updated: 29 Aug 2021 7:28 PM GMT)

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில், இந்தியா நேற்று 6 தங்கப்பதக்கங்களை வென்றது.

துபாய், 

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று இந்தியா 6 தங்கப்பதக்கங்களை வேட்டையாடியது. 

இந்திய வீரர் ரோகித் சமோலி 48 கிலோ பிரிவின் இறுதி ஆட்டத்தில் மங்கோலியாவின் அட்கோன்பயாரை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதே போல் பரத் ஜோன், விஷூ ரதீ, தனு, மகி ராகவ், நிகிதா சந்த் ஆகிய இந்தியர்களும் தங்களது இறுதிப்போட்டியில் வெற்றி கண்டு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றனர்.

Next Story