சர்வதேச பில்லியர்ட்ஸ்: 24வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் கைப்பற்றினார்

கடந்த வாரம் அவர் 11வது முறையாக ஆசிய பட்டத்தை வென்று இருந்தார். இதை தொடர்ந்து தற்போது உலக சாம்பியன் பட்டத்தை 24வது முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார்
தோகா
ஐபிஎஸ்எப் சர்வதேச ஸ்னூக்கர் உலகக் கோப்பை கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி நேற்று தனது 24 வது உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் இறுதி போட்டியில் பாகிஸ்தானின் பாபர் மாசிக்கு எதிராக வெற்றி பெற்றார். கடந்த வாரம் பங்கஜ் 11வது முறையாக ஆசிய பட்டத்தை வென்று இருந்தார் .
இதை தொடர்ந்து தற்போது உலக சாம்பியன் பட்டத்தை 24வது முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார் .
இது குறித்து அவர் கூறியதாவது :
அடுத்தடுத்து இரு சாம்பியன் பட்டம் வென்றது பெருமை அளிக்கிறது . இன்னும் அதிகமாக உழைப்பதற்கு இந்த வெற்றிகள் உத்வேகம் அளிக்கின்றன . இதற்கு நான் அதிர்ஷ்டம் செய்து உள்ளேன் . இரு தங்க பதக்கங்களுடன் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளேன் " இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story