ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.
கடந்த வாரம் நடந்த ஆண்கள் கூட்டு பிரிவில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று இருந்துது.
தோகா ,கத்தார்.
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த ஆண்கள் கூட்டு பிரிவில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று இருந்துது.
இந்நிலையில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்,மானவ் தாக்கர் ஜோடி தென்கொரியாவின் வூஜின் ஜாங் ,ஜோங்ஹூன் இணையிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.
இதனால் வெண்கல பதக்கத்துடன் ஹர்மீத் தேசாய்,மானவ் தாக்கர் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேறியது.
பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ஜோடி ஜப்பானின் யுகியா உடா, ஷுன்சுக்கே இணையிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்துடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேறினர்.
Related Tags :
Next Story