ஜூனியர் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் :இத்தாலியில் இன்று தொடங்குகிறது.

அக்டோபர் 6 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீரர்,வீராங்கனைகள் பட்டியலை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டது.
ஒல்பியா ,இத்தாலி
2021 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் இத்தாலியின் ஒல்பியா நகரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீரர்,வீராங்கனைகள் பட்டியலை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டது.
ஆண்களுக்கான 60 கிலோ எடை பிரிவில் ஜதின், 66 கிலோ எடை பிரிவில் ஜெகதீஷ் ,73 கிலோ எடை பிரிவில் அருண் குமார்,81 கிலோ எடை பிரிவில் மோஹித் செஹ்ராவாட் ,90 கிலோ எடை பிரிவில் ஜெக்தார் சிங் ,100 கிலோ எடை பிரிவில் தீபக் தேஸ்வால் , 100+ கிலோ எடை பிரிவில் யாஷ் காங்தாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதே போல் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் ரித்து ,52 கிலோ எடை பிரிவில் சிம்ரன்,57 கிலோ எடை பிரிவில் லிந்தோய் ,63 கிலோ எடை பிரிவில் உன்னாடி சர்மா, 70 கிலோ எடை பிரிவில் ரெபினா தேவி, 78 கிலோ எடை பிரிவில் ரோஷினி தேவி, 78+ கிலோ எடை பிரிவில் இஷ்ரூப் நரங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Related Tags :
Next Story