மாநில தடகள போட்டி: சென்னை அணி ‘சாம்பியன்’


மாநில தடகள போட்டி: சென்னை அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 18 Oct 2021 3:56 AM IST (Updated: 18 Oct 2021 3:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்களில் பிரைம் ஸ்போர்ட்ஸ் வீரர் சுரேந்தரும் (52.37 வினாடி), பெண்களில் அக்சர் ஸ்போர்ட்ஸ் வீராங்கனை திவ்யாவும் (1 நிமிடம் 01.44 வினாடி) முதலிடம் பிடித்தனர். ஓபன் உயரம் தாண்டுதலில் கன்னியாகுமாரி வீராங்கனை கிருஷ்ண ரேகா (1.48 மீட்டர்) தங்கம் வென்றார். போல் வால்ட் பந்தயத்தில் சக்தி எம்.ஆர். வீரர் சிவா 5.05 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

3 நாள் போட்டி நிறைவில் சென்னையைச் சேர்ந்த பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என்று 17 பதக்கங்களை வென்றதுடன் 128 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தட்டிச் சென்றது. போலீஸ் அணி 98 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், தெற்கு ரெயில்வே 72 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பெற்றன. தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், செயலாளர் லதா ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
1 More update

Next Story