சர்வதேச டேபிள் டென்னிஸ்: சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி “சாம்பியன்”


சர்வதேச டேபிள் டென்னிஸ்: சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி “சாம்பியன்”
x
தினத்தந்தி 31 Oct 2021 12:24 AM GMT (Updated: 31 Oct 2021 12:24 AM GMT)

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடியினர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

துனிசியா,

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகள் துனிசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஜி.சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடியினர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் “சாம்பியன்” பட்டத்தை கைப்பற்றினர். 

இறுதி சுற்றில் இவர்கள் 11-9, 4-11, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் எமானுவல் லெப்சன்- அலெக்சாண்டர் கேசின் இணையை வீழ்த்தினர். இது குறித்து தமிழகத்தை சேர்ந்த சத்யன் கூறுகையில், சர்வதேச டேபிள் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தான் வென்ற முதல் பட்டம் இது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Next Story