உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 31 Oct 2021 8:51 PM GMT (Updated: 31 Oct 2021 8:51 PM GMT)

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு முன்னேறினர்.

பெல்கிரேடு,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் நேற்று 54 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ்குமார் 5-0 என்ற கணக்கில் காலெப் டைரடோ (புயர்டோ ரிகோ) தோற்கடித்து முதல் வீரராக கால்இறுதிக்குள் நுழைந்தார். 

இதே போல் 92 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், ஜகோன் குர்போனோவை (தஜிகிஸ்தான்) எதிர்கொண்டார். நரேந்தர் விட்ட குத்துகளில் நிலைதடுமாறிய அவர் சமாளிக்க முடியாமல் பின்வாங்கினார். இதையடுத்து 2-வது சுற்றுடன் ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் நரேந்தர் வெற்றிபெற்றதாக அறிவித்தனர். இதன் மூலம் நரேந்தரும் கால்இறுதிக்கு முன்னேறினார்.


Next Story