சென்னையில் மாவட்ட கபடி போட்டி 3 நாட்கள் நடக்கிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Jan 2022 9:12 PM GMT (Updated: 8 Jan 2022 9:12 PM GMT)

சென்னையில் மாவட்ட கபடி போட்டி 3 நாட்கள் நடக்க இருக்கிறது.

சென்னை,

சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட கபடி சாம்பியன்ஷிப் போட்டி தண்டையார்பேட்டையில் உள்ள பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு அரங்கில் வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 

இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் உடல் எடை 85 கிலோவுக்கும் வீராங்கனைகளின் எடை 75 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் தங்களது பெயரை நாளை (10-ந் தேதி) முதல் 13-ந் தேதிக்குள் நொச்சிகுப்பம் சிங்காரவேலர் திடலில் நடைபெறும் முகாமில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த போட்டியின் போது நடைபெறும் சென்னை மாவட்ட கபடி சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. இந்த தகவலை சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story