'பி' டிவிசன் கைப்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி ‘சாம்பியன்'


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Jan 2022 9:59 PM GMT (Updated: 8 Jan 2022 9:59 PM GMT)

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி' டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி' டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஐ.சி.எப். அணி 19-25, 25-21, 25-18, 25-18 என்ற செட் கணக்கில் வருமான வரி மனமகிழ் மன்ற அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

எஸ்.ஆர்.எம். அகாடமி 3-வது இடத்தையும், சென்னை மாநகர போலீஸ் 4-வது இடத்தையும் பெற்றன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார். 

வருமான வரி கூடுதல் கமிஷனர் எஸ். பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலிடம் பிடித்த ஐ.சி.எப். அணிக்கு ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு கோப்பையையும், 2-வது இடம் பெற்ற வருமான வரி அணிக்கு எஸ்.என். ஜெ. கோப்பையையும் வழங்கினார். 

ரோமா குழும நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ.ராஜன், ஸ்ரீ முகாம்பிகா இன்போ சொலியூஷன் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.பி.செல்வகணேஷ், தமிழ்நாடு கைப்பந்து சங்க செயல் துணைத் தலைவர் பி.ஜெகதீசன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன், பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story