இந்திய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது..!


இந்திய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது..!
x
தினத்தந்தி 10 Jan 2022 7:31 PM GMT (Updated: 10 Jan 2022 7:31 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டன் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி, 

உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத் மற்றும் இங்கிலாந்து இரட்டையர் பிரிவு வீரர் சியான் வென்டி மற்றும் அவரது பயிற்சியாளர் நாதன் ராபர்ட்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. 

ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உள்பட பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story