சர்வதேச பேட்மிண்டன்: பிரனாய் காலிறுதிக்கு தகுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 7:17 PM GMT (Updated: 20 Jan 2022 7:17 PM GMT)

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


லக்னோ, 

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21-11, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பியான்ஷூ ரஜாவத்தை போராடி சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சமியா இமாத் பரூக்கி 21-6, 21-15 என்ற நேர்செட்டில் சகநாட்டவர் கனிகா கன்வாலையும், அனுபமா உபாத்யாயா (இந்தியா) 21-12, 21-19 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஸ்மித் தோஷ்னிவாலையும் வீழ்த்தி கால்இறுதியை எட்டினர்.


Next Story