சர்வதேச பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து தகுதி


சர்வதேச பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து தகுதி
x
தினத்தந்தி 21 Jan 2022 8:18 PM GMT (Updated: 21 Jan 2022 8:18 PM GMT)

இந்திய வீராங்கனைகள் மால்விகா பான்சோத், அனுபமா உபாத்யாயா ஆகியோரும் அரைஇறுதியை எட்டினர்.

லக்னோ, 

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்கை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனைகள் மால்விகா பான்சோத், அனுபமா உபாத்யாயா ஆகியோரும் அரைஇறுதியை எட்டினர்.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 16-21 என்ற நேர்செட்டில் பிரான்சின் அர்னாட் மெர்க்லியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். மற்றொரு இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 11-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் ரஷியாவின் செர்ஜி சிரான்டை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-தெரசா ஜாலி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தெரசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணையும் அரைஇறுதிக்குள் நுழைந்தன.


Next Story