புரோ கபடி லீக்: புனேரி பால்டன், யு மும்பா அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: புனேரி பால்டன், யு மும்பா அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 22 Jan 2022 4:25 PM GMT (Updated: 22 Jan 2022 4:25 PM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 37 - 35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றது. 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் யு மும்பா அணி 42-35 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Next Story