புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாவை வீழ்த்தி புனே அணி வெற்றி


புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாவை வீழ்த்தி புனே அணி வெற்றி
x
தினத்தந்தி 27 Jan 2022 7:53 PM GMT (Updated: 27 Jan 2022 7:53 PM GMT)

நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் உ.பி.யோத்தா அணிகள் மோதின.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 79-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும்  உ.பி.யோத்தா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 44-38 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி 7-வது வெற்றியை வசப்படுத்தியது. மொகித் கோயத் (14 புள்ளி), அஸ்லாம் (12 புள்ளி) புனே அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 14-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தாவுக்கு இது 6-வது தோல்வியாகும்.

மேலும் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோத இருக்கின்றன.

Next Story