பிரைம் வாலிபால் லீக்: சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக உக்கரபாண்டியன் நியமனம்..!


பிரைம் வாலிபால் லீக்: சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக உக்கரபாண்டியன் நியமனம்..!
x
தினத்தந்தி 27 Jan 2022 9:17 PM GMT (Updated: 27 Jan 2022 9:17 PM GMT)

சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை, 

7 அணிகள் பங்கேற்கும் முதலாவது பிரைம் வாலிபால் லீக் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த 35 வயதான எம். உக்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியின் ஷெட்டரான உக்கரபாண்டியன் 3 ஆசிய விளையாட்டு போட்டியிலும், 3 தெற்காசிய போட்டியிலும், 5 ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் இந்திய அணிக்காக ஆடிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

சென்னை பிளிட்ஸ் அணி வருமாறு:-

உக்கரபாண்டியன் (கேப்டன்), அக்ஹின், நவீன்ராஜா ஜேக்கப், வைஷ்ணவ், கனகராஜ், மொகித் ஷர்வத், பிரசாந்த், அமித்சிங் தன்வர், ஜோபின் வர்கீஸ், ரஜத் சவுத்ரி, புருனோ அமோரிம் சில்வா, பெர்னாண்டோ கோன்ஜாலஸ், பாக்யராஜ், துராம் நவீன், தலைமை பயிற்சியாளர்: சந்தர் சிங், பயிற்சியாளர்: சுப்பா ராவ், உதவி பயிற்சியாளர்: ரமேஷ் மென்டிஜெரி, மானேஜர்: சபரி ராஜன்.

Next Story