இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகிறார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்!!


இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகிறார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்!!
x
தினத்தந்தி 29 Jan 2022 9:00 AM GMT (Updated: 29 Jan 2022 9:00 AM GMT)

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இளம் இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.


புதுடெல்லி,

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர்  12 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, 5 முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், இளம் இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராக பணியாற்ற உள்ளார் என்று உறுதிபடுத்தியுள்ளது. 

விஸ்வநாதன் ஆனந்த் அடுத்த வியாழக்கிழமை முதல் இந்த புதிய பணியை தொடங்க உள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு  விரும்புகிறது. இதற்கான முயற்சியாக ஆனந்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் பங்கேற்பதற்கான 10 வீரர்கள் மற்றும் 10 வீராங்கனைகளை செஸ் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.

அதில் ஆண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள வீரர்கள் வருமாறு:- 

விதித் குஜராத்தி, பி ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின், எஸ் எல் நாராயணன், கே சசிகிரண், பி அதிபன், கார்த்திகேயன் முரளி, அர்ஜுன் எரிகைசி, அபிஜீத் குப்தா மற்றும் சூர்யா சேகர் கங்குலி.

பெண்கள் பிரிவில் தேர்வாகியுள்ள வீரர்கள் வருமாறு:- 

கோனேரு ஹம்பி, டி ஹரிகா, வைஷாலி ஆர், டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி, வந்திகா அகர்வால், மேரி ஆன் கோம்ஸ், சௌமியா சுவாமிநாதன் மற்றும் ஈஷா கரவாடே.

இவர்களில் ஆசிய செஸ் தொடரில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ள இறுதிகட்ட 5 வீரர்களை வரும் ஏப்ரல் மாதம் தேர்வுக்குழு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story