மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி - பழனி மாணவர்கள் சாதனை.


மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி - பழனி மாணவர்கள் சாதனை.
x
தினத்தந்தி 3 May 2022 3:47 PM IST (Updated: 3 May 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பழனி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பழனி:

தமிழ்நாடு யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில் தஞ்சாவூரில் மாநில அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூப்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

17 வயதுக்கு உட்பட்ட போட்டியில் பழனியை சேர்ந்த கிஷோர் குமார், நிகில், குரு சங்கர், வீர ஹரிகரன்,ராஜவேல், விக்னேஷ் பரத் ராஜ், ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க்க தகுதி பெற்றுள்ளனர். அந்த மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர் சதீஷ்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.
1 More update

Next Story