'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். வெற்றி


ஏ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். வெற்றி
x

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 8-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். 25-19, 25-21, 25-23 என்ற நேர்செட்டில் ஐ.சி.எப். அணியை சாய்த்து தொடர்ந்து 4-வது வெற்றியை தனதாக்கியது. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 25-20, 25-21, 25-23 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.


Next Story