ஆணழகன் போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை.!


ஆணழகன் போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை.!
x

இவர் ஏற்கனவே தென்னிந்திய போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

திருச்செந்தூர்,

சென்னை துரைப்பாக்கம் டி.பி. ஜெயின் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தகவல் தொடர்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் எல்.சிவபாலன், பாடிபில்டிங் 70 கிலோ எடை ஜூனியர் பிரிவில் முதலிடம் பிடித்து மிஸ்டர் இந்தியாவாக தேர்வாகி சாதனை படைத்தார்.

இவர் ஏற்கனவே தென்னிந்திய போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். சாதனை படைத்த மாணவரை கல்லூரி முதல்வர் ஜி.வைஸ்லின் ஜிஜி, உடற்கல்வி இயக்குனர் ஜே.தேவராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

1 More update

Next Story