உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர்  ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்
x
தினத்தந்தி 16 July 2022 12:03 PM IST (Updated: 16 July 2022 1:42 PM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

சாங்வான்,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 593 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 16-12 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியின் ஜலன் பெக்லரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில்

ஹங்கேரியைச் சேர்ந்த இஸ்த்வான் பெனி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ஆண்களுக்கான டிராப் போட்டியின் இறுதி சுற்றில் பிரித்விராஜ் தொண்டைமான், விவான் கபூர், போவ்னீஷ் மென்டிரதா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-6 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

1 More update

Next Story