சர்வதேச குத்துச்சண்டை சங்க துணைத்தலைவராக அஜய்சிங் தேர்வு


சர்வதேச குத்துச்சண்டை சங்க துணைத்தலைவராக அஜய்சிங் தேர்வு
x

ஐ.பி.ஏ.வின் துணைத்தலைவராக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் பெண்கள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஐ.பி.ஏ.) போர்டு இயக்குனர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் ஐ.பி.ஏ.வின் துணைத்தலைவராக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளையோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை அடுத்த ஆண்டு குரோஷியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அஜய்சிங் நிருபர்களிடம் கூறுகையில், 'குத்துச்சண்டையில் மிகப்பெரிய போட்டிகளை இந்தியாவில் நடத்த முயற்சிப்போம். இது இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டு மீதான ஆர்வம் மற்றும் கலாசாரத்தை உருவாக்க உதவிகரமாக இருக்கும்' என்றார்.

1 More update

Next Story