ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்று வில்வித்தை வீராங்கனை பஜன் கவுர் அசத்தல்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யாவில் நடந்து வருகிறது.
அன்டல்யா,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் ஒற்றையர் பிரிவில் தனது தொடக்கக் கட்ட ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட இந்திய வீராங்கனை பஜன் கவுர், இறுதி ஆட்டத்தில் மொபினா பல்லாவை (ஈரான்) சந்தித்தார்.
இதில் இலக்கை நோக்கி துல்லியமாக அம்புகளை எய்து புள்ளிகளை குவித்த பஜன் கவுர் 6-2 என்ற கணக்கில் மொபினாவுக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அத்துடன் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றும் அசத்தியுள்ளார்.
Related Tags :
Next Story