ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா


ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப்:  5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா
x

ஜோர்டானில் நடந்து வரும் ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 பதக்கங்களை உறுதி செய்து உள்ளது.



அம்மன்,


ஜோர்டான் நாட்டின் அம்மன் நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், இந்திய வீராங்கனை மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான லவ்லினா போர்கோஹெயின் மற்றும் கஜகஸ்தானின் வேலன்டினா கல்ஜோவா ஆகியோர் 75 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதியில் விளையாடினர்.

இந்த போட்டியில், 3-2 என்ற புள்ளி கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால், இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பினை அவர் உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன்பு மீனாட்சி (52 கிலோ எடை பிரிவு), பிரீத்தி (57 கிலோ எடை பிரிவு), பர்வீன் (63 கிலோ எடை பிரிவு) மற்றும் அங்குஷிடா போரோ (66 கிலோ எடை பிரிவு) ஆகியோர் தங்களது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி, இந்தியாவுக்கு பதக்கங்களை உறுதி செய்து உள்ளனர். இதனால், இந்தியாவுக்கு மொத்தம் 5 பதக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளது.


Next Story