ஆசிய விளையாட்டு கபடி போட்டி: இந்திய அணி 2-வது வெற்றி

image courtesy: hangzhou2022.cn via ANI
ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த கபடி போட்டியில் பெண்களுக்கான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தாய்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
ஹாங்சோவ்,
ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த கபடி போட்டியில் ஆண்களுக்கான (ஏ பிரிவு) லீக் ஆட்டத்தில் இந்திய அணி 63-26 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய அணி, சீன தைபே மற்றும் ஜப்பானுடன் மோதுகிறது.
பெண்களுக்கான (ஏ பிரிவு) ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 54-22 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியதுடன் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-நேபாளம் அணிகள் சந்திக்கின்றன.
Related Tags :
Next Story






