ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி


ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி
x

ஆசிய விளையாட்டில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

ஹாங்சோவ்,

இந்திய மகளிர் பேட்மிட்டன் வீராங்கனையும் இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து ஆசிய விளையாட்டு போட்டியில் ஒற்றயர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

காலிறுதியில் சீனாவின் பிங்ஜியாவ் ஹீயை எதிர்கொண்ட அவர், 2-0 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். முதல் செட்டில் 21-16, இரண்டாவது செட்டில் 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 47 நிமிடங்களில் முடிவடைந்தது. மேலும் இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறினார்.

பி.வி.சிந்து இந்த ஆண்டு மட்டும் 7 தொடர்களில் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். இந்த ஆண்டு இதுவரை எந்த தொடரையும் அவர் வெல்லவில்லை. இது அவருக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.


Next Story