ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி


ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 12 Feb 2023 9:13 PM GMT (Updated: 12 Feb 2023 11:49 PM GMT)

தோல்வி அடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

சென்னை,

21-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் டாப்-2 இடங்களை பெற்ற பாகிஸ்தான்- இந்தியா அணிகள் நேற்று மல்லுக்கட்டின.

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் நூர் ஜமான் 12-10, 9-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் இந்தியாவின் கிருஷ்ணா மிஸ்ராவை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானின் முகமது ஹம்சா கான் 11-7, 11-5, 11-4 என்ற நேர் செட்டில் பார்த் அம்பானியை வீழ்த்தினார்.

முடிவில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் இந்தியாவை சாய்த்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. தோல்வி அடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.


Next Story