ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியாவுக்கு தங்க பதக்கம்


ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியாவுக்கு தங்க பதக்கம்
x

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பின் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் தங்க பதக்கம் வென்றார்.

சாங்வொன்,

தென்கொரியாவின் சாங்வொன் நகரில், 2023-ம் ஆண்டிற்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர், ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இறுதி சுற்று போட்டியில் 463.5 புள்ளிகளை சேர்த்து தங்க பதக்கம் தட்டி சென்றுள்ளார்.

சீனாவின் தியான் ஜியாமிங் வெள்ளி பதக்கமும், சக வீரரான டூ லின்ஷு வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.


Next Story