ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:11 PM GMT (Updated: 5 Aug 2023 12:21 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரனாய், 21-18, 21-12 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிரனாய் இறுதி போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் அவர், சீன வீரர் வெங் ஹாங்யங் உடன் மோதவுள்ளார்.


Next Story