ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின்  பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு  முன்னேறினார்
x
தினத்தந்தி 2 Aug 2023 9:10 AM GMT (Updated: 2 Aug 2023 9:53 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 21-18, 21-13 என்ற கணக்கில் சகநாட்டவரான அஷ்மிதா சாலிஹாவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஓற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னனி வீரரான பிரனாய் ஹாங்காங்கை சேர்ந்த லீ செயுக் யியூ-வுடன் மோதினார்.

இதில் பிரனோய் 21-18, 16-21, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல இந்தியாவின் ஸ்ரீகாந்த் , ஜப்பான் வீரரான நிஷிமோட்டோவை 21-18, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story