ரித்மிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் - பல்கேரியா தங்கம் வென்றது


x

சர்வதேச ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடரில் போட்டியை நடத்தும் பல்கேரியா முதல் தங்கத்தை வென்று உள்ளது.

சோபியா,

சர்வதேச ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடரில் போட்டியை நடத்தும் பல்கேரியா முதல் தங்கத்தை வென்று உள்ளது. பல்கேரிய தலைநகர் சோபியாவில் ரித்மிக் ஜிம்னாஸ்டிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் குழுப் பிரிவில் நடைபெற்ற போட்டியில் பல்கேரிய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக் சாம்பியனான பல்கேரியா 2014-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலக குழு ரித்மிக் ஜிம்னாஸ்டிக் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்பெயின் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

உடலை வில்போல் வளைத்து வீராங்கனைகள் அநாயசமாக ஜிம்னாஸ்டிக்கில் ஈடுபட்டது பார்வையாளர்களைக் கவர்ந்தது.Next Story