செஸ் ஒலிம்பியாட் தாக்கம்- தாயகம் திரும்பியதும் வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்ட செஸ்சபிள் சிஇஓ


செஸ் ஒலிம்பியாட் தாக்கம்- தாயகம் திரும்பியதும் வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்ட செஸ்சபிள் சிஇஓ
x

Image Tweeted By @blackatlantic

தமிழ்நாட்டின் வத்தக் குழம்பு தனக்கு மிகவும் பிடித்ததாக கிரிட் வான்டே வெல்டே கூறியுள்ளார்.

ஆம்ஸ்டர்டம்,

185 நாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44 வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர்கள் பண்பாட்டை விளக்கும் வகையில் நினைவு பரிசு, பரிசு பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது.

இந்த தொடரில் பங்கேற்க நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வான்டே வெல்டே வந்து இருந்தார். இவர் இசைக் கலைஞராகவும், செஸ்சபிள் இணையத்தளத்தின் சி.இ.ஓ. வாகவும் உள்ளார். சென்னைக்கு வந்த இவருக்கு இங்குள்ள உணவு வகைகள் மிகவும் பிடித்து போனது.

சமீபத்தில் கூட இவர் தமிழ்நாட்டின் வத்தக்குழம்பு தனக்கு மிகவும் பிடித்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில், சொந்த நாடு திரும்பிய அவருக்கு, தமிழ்நாட்டு உணவு மீதான ஈர்ப்பு குறையவில்லை.

இதனையடுத்து, வீட்டில் தனது தாயுடன் சேர்ந்து தோசை சுட்டு சாப்பிட்டுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்கு வந்த எனது தாய்க்கு, அங்குள்ள உணவுகள் மிகவும் பிடித்து போய்விட்டது. அங்கிருந்த உணவுகளின் புகைப் படங்களை பார்த்துவிட்டு, தற்போது அவர் எங்களுக்கு வீட்டிலேயே தோசை சுட்டு கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய இந்த டுவீட் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story