நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்தது


நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்தது
x

இந்திய ஏ அணி வெண்கல பதக்கம் வெல்ல ஹரிகா துரோணவள்ளி முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

ஐதராபாத்,

மாமல்லபுரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கணை ஹரிகா துரோணவள்ளி பங்கேற்று விளையாடினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற போது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

செஸ் ஆடிய போது நாற்காலியில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் அவர் சிரமப்பட்டார். சிரமத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆடிய அவர், இந்திய ஏ அணி வெண்கல பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் ஹரிகா துரோணவள்ளிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story