செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று: தமிழக வீரர் குகேஷ் வெற்றி..!


செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று: தமிழக வீரர் குகேஷ் வெற்றி..!
x

image courtesy: International Chess Federation twitter

செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தா - வெஸ்லி இடையேயான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

சென்னை,

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

8-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 8-வது சுற்றில் இந்தியா 1-வது அணி அர்மேனியாவுடனும், இந்தியா 2-வது அணி அமெரிக்காவுடனும் மோதி வருகின்றன.

இந்த நிலையில் உலகின் 7ம் நம்பர் வீரரான அமெரிக்காவின் வெஸ்லியுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. கருப்புக்காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்த ஆட்டத்தின் 33-வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் குகேஷ் உலகின் 5ம் நம்பர் வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோவுடன் மோதினார். இந்த போட்டியில் கருப்புக்காய்களுடன் விளையாடிய குகேஷ், ஆட்டத்தின் 45-வது நகர்த்தலில் ஃபேபியானோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story