செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் 7-வது முறையாக வெற்றி


செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் 7-வது முறையாக வெற்றி
x

செஸ் ஒலிம்பியாட்டில் தமிழக வீரர் குகேஷ், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை வீழ்த்தி 7-வது முறையாக வெற்றி பெற்றார்.

சென்னை,

186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. ஓபன் (வீராங்கனைகளும் ஆடலாம்), பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி மகுடம் சூடும். இதுவரை 6 சுற்று நிறைவடைந்துள்ளது.

போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு பரவசத்தில் ஆழ்ந்தனர். ஜாலியாக நேரத்தை செலவிட்ட அவர்கள் மனஅழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியுடன் அடுத்த சுற்றுக்கு தயாராகியுள்ளனர். இந்த நிலையில் 7-வது சுற்று போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.

இதில் ஆண்கள் பிரிவில் இந்தியா 'பி' அணியைச் சேர்ந்த தமிழக வீரர் குகேஷ், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலுடன் மோதினார். இந்த போட்டியில் கருப்புக் காய்களுடன் விளையாடிய குகேஷ், 46 வது நகர்த்தலில் கார்லஸ் டேனியலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story