செஸ் உலகக்கோப்பை: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


செஸ் உலகக்கோப்பை: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Aug 2023 9:11 PM IST (Updated: 24 Aug 2023 10:14 PM IST)
t-max-icont-min-icon

2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

'பிடே' உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற டை-பிரேக்கர் ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்

இந்த நிலையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா. உங்கள் பயணம் உண்மையான உத்வேகமாக இருந்தது, சிறந்த செஸ் வீரர்களை வென்று இறுதிப் போட்டிக்கு சென்ற உங்கள் அளப்பரிய திறமை தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் நம் நாட்டிற்கு மிகப் பெரிய பாராட்டுகளைத் தருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story