உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதும் 'டைபிரேக்கர்' சுற்று தொடங்கியது


உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி: பிரக்ஞானந்தா- கார்ல்சென் மோதும் டைபிரேக்கர் சுற்று தொடங்கியது
x

Image :International Chess Federation

தினத்தந்தி 24 Aug 2023 10:13 AM GMT (Updated: 24 Aug 2023 11:33 AM GMT)

டை பிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாகு,

'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர், இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டைபிரேக்கர் சுற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் மோதும் டை பிரேக்கர் சுற்று தொடங்கியது. உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்சலனை வீழ்த்த தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முனைப்பு காட்டி வருகிறார்.

இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் மோதிய 2 போட்டிகளும் டிராவில் முடிந்ததால் டை பிரேக்கர் போடப்பட்டது. (டைபிரேக்கரில் சட்டென்று யோசித்து மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டும்)

20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.


Next Story