காமன்வெல்த்: நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு கேரள முதல்வர் வாழ்த்து


காமன்வெல்த்: நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு கேரள முதல்வர் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Aug 2022 11:20 AM GMT (Updated: 2022-08-05T17:01:40+05:30)

காமன்வெல்த்தின் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து கூறியுள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்நிலையில் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் முரளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

காமன்வெல்த்தில் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் முரளிக்கு வாழ்த்துக்கள். நீளம் தாண்டுதலில் முதல் பதக்கத்தை வென்று கொடுத்து கேரளாவிற்கும், இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனை பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.


Next Story