மாவட்ட கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி 'சாம்பியன்'


மாவட்ட கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன்
x

இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணியை சாய்த்து டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட 'பி' டிவிசன் ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்களுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் 22-25, 25-18, 25-10 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் டாக்டர் சிவந்தி பவுண்டேசன் 25-14, 25-16 என்ற நேர்செட்டில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியை தோற்கடித்தது.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சான் அகாடமி நிர்வாக இயக்குனர் ஆர்.அர்ச்சனா தலைமை தாங்கினார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், சுங்க இலாகா மற்றும் ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் செந்தில்வேலவன், சுங்க இலாகா கூடுதல் கமிஷனர் தமிழ்வேந்தன், ஜி.பி.ஆர்.மெட்டல்ஸ் இயக்குனர் விக்ரமாதித்யா ரதி, ரோமா குழும நிர்வாக இயக்குனர் ராஜன், முன்னாள் சர்வதேச கைப்பந்து வீராங்கனை காயத்ரி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், தினகரன், பழனியப்பன், ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் ஜி.எஸ்.டி. அணி 25-14, 25-21, 25-22 என்ற செட் கணக்கில் அக்னி பிரண்ட்ஸ் கிளப்பையும், எஸ்.ஆர்.எம்,. 25-21, 25-17, 25-15 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ.டி. அணியையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜி.எஸ்.டி.-எஸ்.ஆர்.எம். அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story