பள்ளி கைப்பந்து போட்டியில் டான்போஸ்கோ, ரோட்லர் அணிகள் 'சாம்பியன்'


பள்ளி கைப்பந்து போட்டியில் டான்போஸ்கோ, ரோட்லர் அணிகள் சாம்பியன்
x
தினத்தந்தி 3 Sep 2023 9:30 PM GMT (Updated: 3 Sep 2023 9:30 PM GMT)

ஆண்கள் பிரிவில் கடைசி நாளில் நடந்த ஆட்டத்தில் டான் போஸ்கோ (பெரம்பூர்) 25-23, 25-14 என்ற நேர் செட்டில் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது. ஆண்கள் பிரிவில் கடைசி நாளில் நடந்த ஆட்டத்தில் டான் போஸ்கோ (பெரம்பூர்) 25-23, 25-14 என்ற நேர் செட்டில் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. வேலம்மாள், செயின்ட் பீட்டர்ஸ், செயின்ட் பீட்ஸ் முறையே 2 முதல் 4-வது இடங்களை பிடித்தன.

பெண்கள் பிரிவின் கடைசி நாள் ஆட்டத்தில் சென்னை ரோட்லர் அரசு பள்ளி அணி 13-25, 25-22, 25-13 என்ற செட் கணக்கில் ஜேப்பியார் மெட்ரிக் அணியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. ஜேப்பியார், லேடி சிவசாமி, குண்டூர் சுப்பையா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு ரோமா குரூப் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ.ராஜன் தலைமை தாங்கினார்.

வருமானவரி கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன் பரிசுகளை வழங்கினார். எஸ்.டி.ஏ.டி. துணை பொதுமேலாளர் மெர்சி ரெஜினா, சர்வதேச கைப்பந்து வீரர்கள் நவீன் ராஜா ஜேக்கப், அங்கமுத்து, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், தினகரன், ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story