ஊக்கமருந்து விவகாரம்; தடகள வீராங்கனை அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை


ஊக்கமருந்து விவகாரம்; தடகள வீராங்கனை அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை
x

தடகள வீராங்கனை அஞ்சலி தேவிக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவி சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (NADA) உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதற்கு முன் அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



1 More update

Next Story