சர்வதேச பாரா நீளம் தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்த ஜெர்மனி விரர்


சர்வதேச பாரா நீளம் தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்த ஜெர்மனி விரர்
x

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வீரர் மார்க்கஸ் ரெஹ்ம், 8.66 மீட்டர் தூரத்தை தாண்டி சாதனை படைத்துள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னனி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வீரர் மார்க்கஸ் ரெஹ்ம், 8.66 மீட்டர் தூரத்தை தாண்டினார்.

இதன் மூலம் புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 8.62 மீட்டர் தூரத்தை தாண்டி மார்க்கஸ் ரெஹ்ம் சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது 8.66 மீட்டர் தூரத்தை தாண்டி, தனது முந்தையை சாதனையை அவரே முறியடித்துள்ளார்.


Next Story