செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய அணி வலுவாக உள்ளது! - 4 முறை உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன்


செஸ் ஒலிம்பியாட் 2022: இந்திய அணி வலுவாக உள்ளது! - 4 முறை உலக செஸ் சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன்
x

இந்திய ஏ மற்றும் பி அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

சென்னை,

மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.

சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது.

சமீபத்தில், செஸ் சாம்பியன் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா நான்கு முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். இதனால், உலகத்தின் கவனம் பிரக்ஞானந்தாவை நோக்கி திரும்பியது.

இந்நிலையில், இன்று, மாமல்லபுரத்தில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வரும் மாக்னஸ் கார்ல்சல் அளித்த பேட்டியில், பேசிய அவர், "என்னை பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், அவருக்கு எதிராக பிளஸ் ஸ்கோரை எடுத்துள்ளேன். அவர் ஒரு திறமையான இளம் வீரர். பிரக்ஞானந்தா தலைமையிலான இந்தியா 'பி' மீது பெரும் மதிப்பு உள்ளது.

இளம் வீரர்கள் கொண்ட இந்திய 'பி' அணியே ஆபத்தானது. அவர்கள் மிக வலுவாக உள்ளார்கள் என எண்ணுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்திய ஏ மற்றும் பி அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது" என்றார்.


Next Story