ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற வேண்டும் - பி.டி. உஷா


ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற வேண்டும் - பி.டி. உஷா
x

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை இந்தியா பெற வேண்டும் என்று பி.டி. உஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'நமது நாட்டு வீரர்கள், பயிற்சியாளர், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் கடினமான உழைப்பால், ஹாங்சோவ் ஆசிய விளையாட்டில் புதிய வரலாறு படைத்து இருக்கிறோம். அடுத்த ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை எட்ட முடியும் என்று கருதுகிறேன்.

நாட்டின் விளையாட்டு மேம்பாட்டுக்காக மத்திய அரசு எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கிறது. நமது பிரதமர் விளையாட்டு துறை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை நாம் பெற வேண்டும். டோக்கியா ஒலிம்பிக்கை விட பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நிச்சயம் அதிக பதக்கங்களை வெல்லும் என்று நம்புகிறேன். அந்த பதக்கங்கள் நாம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான காரணியாக அமையும்' என்றார்.


Next Story