சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டி; தங்க பதக்கம் வென்ற இந்தியா


சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டி; தங்க பதக்கம் வென்ற இந்தியா
x

அஜர்பைஜானில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியா தங்க பதக்கம் வென்று உள்ளது.

பகு,

அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் சரப்ஜோத் சிங் மற்றும் வீராங்கனை திவ்யா சுப்பாராஜூ தடிகோள் ஆகியோர் இன்று சிறப்பாக செயல்பட்டனர்.

அவர்கள், பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிர் மிகெக் மற்றும் முன்னாள் உலக சாம்பியனான ஜொரானா அருணோவிச் ஜோடியை 16-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் தட்டி சென்றுள்ளனர்.

மொத்தம் 55 ஜோடிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், தகுதி சுற்றுக்கான போட்டியில் 3 முறை சரப்ஜோத் மொத்தம் 293 புள்ளிகளை குவித்த நிலையில், திவ்யா 288 புள்ளிகளை சேகரித்து உள்ளார். இதனால், இந்தியாவின் மொத்த புள்ளி எண்ணிக்கை 581 ஆனது.

தமிர் மற்றும் ஜொரானா ஜோடியும் இதே புள்ளிகளை பெற்றன. எனினும், ஒரே ஷாட்டில் 10 புள்ளிகளை குவிக்கும் எண்ணிக்கையில் (19) 2-வது இடம் பிடித்தனர். சரப்ஜோத் மற்றும் திவ்யா ஜோடி (24) முதல் இடம் பிடித்து தங்கம் வென்றது.


Next Story